Prime Voice Radio
All NewsNews

இலங்கை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

AntonrajAugust 13, 2026
இலங்கை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பிரித்தானியக் கடற்கரையில் இலங்கை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு பிரித்தானியாவில் கடலில் நீராடச் சென்ற இலங்கையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான கேம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டனிலிருந்து குழுவொன்று சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்களில் மூவர் கடலில் சிக்கியுள்ளனர். இதன்போது 16 வயதுச் சிறுவனும் 24 வயது நபரும் பாதுகாப்பாகக் கரை திரும்பியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று, நீரில் மூழ்கிய இளைஞரைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்தின் பின்னர் அவர் நீரிலிருந்து மீட்கப்பட்ட போதிலும், மருத்துவக் குழுவினரின் முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Share Prime Voice Radio
Live

Test broadcast

Prime Voice Radio