All NewsNews
வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை
AntonrajAugust 15, 2026

திருகோணமலை பொது வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: 3.1 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றம்!
திருகோணமலை:
திருகோணமலை பொது வைத்தியசாலை மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைப் பதித்துள்ளது. 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிருந்து 3 கிலோ 100 கிராம் எடையுடைய மிகப்பாரிய சிறுநீரகக் கல் ஒன்றை வைத்தியர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
பிரேசிலின் உலக சாதனையை முறியடித்த இலங்கையின் மருத்துவத்துறை!
கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பதிவுகளின்படி மிகப்பெரியதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது திருகோணமலையில் அகற்றப்பட்டுள்ள கல் அதனை விட மிக அதிக எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழு:
இக் கடினமான அறுவை சிகிச்சையானது வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இக் குழுவில்:
• வைத்தியர் எம்.எம். ரிஷ்லி
• வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான்
• வைத்தியர் சீ. பிரகலாதன்
• மயக்க மருந்து நிபுணர் அமில
உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் இணைந்து செயல்பட்டு இச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உயர் திறனையும், மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



